குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறாரா ஷிவாங்கி- அதுவும் இவரால் தானா?
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியில் கலகலப்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று தான் குக் வித் கோமாளி. 4வது சீசன் இப்போது 20 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.
கோமாளிகள் மற்றும் போட்டியாளர்கள் சிலர் நமக்கு புதியவர்கள், ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்புடன் தான் நடந்து வருகிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விஜே விஷால் வெளியேற ஷிவாங்கியால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என சில கமெண்டுகள் வந்தன.
ஆனால் ஷிவாங்கி இந்நிகழ்ச்சிக்காக நாங்கள் நிறைய உழைக்கிறோம், யாரும் சாதாரணமாக ஜெயிக்கவில்லை என பதிவு செய்திருந்தார்.
ஷிவாங்கிக்கு பிரச்சனை
தற்போது என்னவென்றால் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து ஷிவாங்கியை வெளியேற அவரது அம்மா வற்புறுத்தி வருகிறாராம், அவர் இசைத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறாராம்.
இதனால் ஷிவாங்கி தனது அம்மாவின் வற்புறுத்தலையும் மீறி தான் குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.
வரும் நாட்களில் அம்மாவின் ஆசைக்காக அவர் குக் வித் கோமாளியில் இருந்து கூட வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று ஷிவாங்கி தரப்பில் தெரிவிக்கிறார்களாம்.
முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக கூறிய சீரியல் நடிகர் பப்லு