தளபதி 65 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனா? வெளியான சூப்பர் தகவல், இதோ..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் சிவர்கார்த்திகேயன் பாடலை எழுதியுள்ளார்.
அதேபோல் நெல்சன் அடுத்து இயக்கவுள்ள தளபதி 65 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடலை எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக நடனமைப்பாளர் சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
#SoBaby on loop . @Siva_Kartikeyan pennava edhuthaley first blockbuster nu dhan ezhuthuvinga polla . Apparam dhan lyrics I think :) . @anirudhofficial pure magic @ananthkrrishnan gasa gasa ????@Nelsondilpkumar waiting for T65 song announcement video. U, Ani ,sk and vijay sir ?
— Sathish krishnan (@dancersatz) February 26, 2021