சிம்புவின் மாநாடு ரிலீஸ் பிரச்சனையின் போது சிவகார்த்திகேயன் உதவினாரா?- வெங்கட் பிரபு கூறிய விஷயம்
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் ஒரு புதிய மனிதராக வலம் வருபவர். இவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும், அதனை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை.
ஆனால் சிம்புவின் படங்கள் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை அவருக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அப்படி அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு கூட ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது.
பிறகு கடைசி நேரத்தில் எல்லாம் தடைகளையும் உடைத்து படம் ரிலீஸ் ஆனது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
பட ரிலீஸ் பிரச்சனையின் போது திரையுலகில் இருக்கும் பலரும் படக்குழுவுக்கு போன் செய்து விசாரித்தார்களாம். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் கூட அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போன் செய்து பட ரிலீஸ் குறித்து விசாரித்தாராம்.
இதனை ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு அதான் எங்கள் தலைவன் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.