Doctor படத்தை விட Don படத்திற்கு அதிக சம்பளம் ஏற்றினாரா சிவகார்த்திகேயன்- இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் அனைவரின் ஆசை நாயகனாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரான Doctor திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
படத்திற்கான டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படத்திற்கான புரொமோஷன் வேலைகளும் பக்காவாக நடந்து வருகிறது.
இப்படம் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பதால் வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்படுகிறது. இந்த Doctor படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 25 கோடி சம்பளம் பெற்றிருக்கிறாராம்.
தான் அடுத்து நடிக்கும் Don படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக ஏற்றியுள்ளாராம். அதாவது படத்திற்கு ரூ. 35 கோடி சம்பளம் வேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகிறது.