சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் நீடிக்கும் சிக்கல்.... பரபரப்பு தகவல்
பராசக்தி
தமிழ் சினிமாவில் மிகவும் பவர்புல்லான டைட்டிலுடன் உருவாகி இருக்கும் படம் பராசக்தி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.
மொழிக்காக போராடி 1965 ஜனவரி 27ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அவர் மறைவைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வீரியமடைந்தது.
இதேபோல் மொழிப் போராட்டத்தின்போது 1965 மார்ச் 12ஆம் தேதி பொள்ளாச்சியில் 250 பேருக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த 2 சம்பவங்களை மையப்படுத்திய கதை பராசக்தி எனப்படுகிறது.

ரிலீஸ்
இப்படம் நாளை (ஜனவரி 9) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான அனைத்த வேலைகளையும் படக்குழு செய்து வருகின்றனர்.
படத்திற்கான புக்கிங் கூட நடந்துவரும் நேரத்தில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை போல சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் தணிக்கை குழு சான்றிதழ் பெறுவதில் சிக்கலாக உள்ளது.
பராசக்தி படத்தில் சில முக்கியமான காட்சிகளை நீக்க கோரி தணிக்கை குழுவினர் சொன்னதாகவும் அதை எடுத்தால் படத்தின் முக்கிய கதை மாறும் என படக்குழு கூறியுள்ளதால் தணிக்கை சான்றிதழ் வருவதில் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கிறது.
இன்று பராசக்தி படத்திற்காக தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்துவிடும் என எதிர்ப்பார்க்கையில் இப்போது வரை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு பராசக்தி பட ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.