புதிய ஹீரோவிற்கு வழிவிடும் நேரம் இது, சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகர் ஸ்ரீதேவா... அவரது பதிவு, ரசிகர்கள் ஷாக்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குடும்ப பாங்கான கதைகளில் ஒன்று.
இப்போது கதையில் மீனா, ரோஹினி பற்றிய முழு உண்மையை அறிந்துகொண்டு என்ன செய்வது என தெரியாமல் மனதிற்குள்ளேயே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். மீனா சொல்லலாம் என முடிவு எடுக்கும் போதெல்லாம் ரோஹினி நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டிய வண்ணம் உள்ளார்.
இதில் கதையை தாண்டி ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் பிரபலமாக இருப்பவர் தான் மனோஜ் என்கிற ஸ்ரீதேவா.

நடிகரின் பதிவு
இவர் தனது இன்ஸ்டாவில் எப்போதும் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து பதிவு போட்டு வருவார்.

இப்போது அவர் ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார், அதில் ஈப்போது நான் ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சு, ஒரு புதிய ஹீரோவுக்கு வழி கொடுக்குற பழைய ஹீரோ மாதிரி என்பதை படித்ததும் ரசிகர்கள் என்ன இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்துகிறாரா வேண்டாம் என ரசிகர்கள் புலம்பினார்கள்.
ஆனால் பதிவின் கடைசியில் பார்த்தால் மனோஜ் கதாபாத்திரத்திற்காக புதிய கண்ணாடி மாற்றுகிறாராம். பழைய கண்ணாடி பேசுவது போல் இப்படியொரு நீண்ட பதிவை போட்டுள்ளார்.