சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் சிங்கள நடிகரா?.. வைரலாகும் பதிவு
சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் கமிட்டான படத்தில் நடித்து வந்தார்.
அந்த படத்தை முடித்த கையோடு சுதா கொங்கரா படத்தில் நடிக்க தொடங்கினார். ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயனுக்கு அங்கேயும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
வீடியோ
1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் இலங்கையின் சினிமா ஆர்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இலங்கை நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற பேச்ச எழுந்துள்ளது.
காரணம் அவர் பராசக்தி படப்பிடிப்பு காட்சிகளுடன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதோடு அவர் படக்குழுவினருடன் இருக்கும் ஒரு போட்டோவும் உள்ளது, இதனால் அவர் பராசக்தி படத்தில் நடித்துள்ளாரா என பேச்சு எழுந்துள்ளது.

பெண்ணின் வயிற்றில் ரக்பி பந்து அளவுள்ள நீர்க்கட்டி - மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! IBC Tamilnadu
