பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா பாக்கியா?- ஷாக்கில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடர் கொரோனாவிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி தொடர்
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடர் தொடங்கியது. திருமணம் ஆனதில் இருந்து குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை இப்போது அவரது கணவர் கோபி ஏமாற்றி வருகிறார்.
பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து எல்லாம் வாங்கி இரண்டாவது திருமணம் வரை அவர் சென்றுவிட்டார். இதுநாள் வரையிலும் அவர் செய்யும் துரோகம் இன்னும் யாருக்கும் தெரிய வருவது இல்லையே, அவருக்கு சரியான பாடத்தை கற்றுத் தர வேண்டும்.
இப்படி ஒரு பெண்ணை ஏமாற்றுவாரா என கோபி மீது கோபத்தை வெளிப்படுத்தாத மக்களே இல்லை.
சீரியலில் நடிகரின் விலகல்
தொடர் ஆரம்பித்ததில் இருந்து ராதிகா என்ற கதாபாத்திர மாற்றம் மட்டும் இருந்தது. ஆனால் சமீபத்தில் செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யன் தொடரில் இருந்து விலகிறார்.
அவருக்கு பதில் விகாஸ் என்ற நடிகர் நடிக்க தொடங்கிவிட்டார்.
வைரலாகும் வதந்தி
இப்போது என்ன தகவல் என்றால் சீரியலில் இருந்து பாக்கியா வேடத்தில் நடிக்கும் சுசித்ரா விலகுவதாக வைரலாக செய்தி பரவுகிறது. ஆனால் இதுகுறித்து சுசித்ராவோ, நான் விலகுவதாக யார் கூறியது, இப்போது கூட படப்பிடிப்பில் தான் உள்ளேன்.
நான் விலகுவதாக வந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
நடிகை தேவயானிக்கு குடும்பத்தில் இப்படியொரு ஒரு பிரச்சனையா?- சோகத்தின் உச்சம்