மூன்று முடிச்சு சீரியல் நேரம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு கிடைத்த பதில்
சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக தற்போது இருந்து வருகிறது மூன்று முடிச்சு. தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ரஞ்சித் பற்றிய எல்லா உண்மையும் தெரிய வந்து, திருமணமும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது காணாமல் போன இரண்டு பெண்களின் நிலை என்ன என்ற ட்ராக் தான் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நேரம் குறைக்கப்படுகிறதா?
தொடர்ந்து ஒரு மணி நேர எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு விரைவில் அரை மணி நேரமாக குறைக்கப்படப்போவதாக ஒரு தகவல் வந்த நிலையில் அந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் மூன்று முடிச்சு தொடர்ந்து ஒரு மணி நேரம் தான் ஒளிபரப்பாகும், நேரம் குறைக்கப்படவில்லை என தகவல் வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் News Lankasri