இவர்தான் நடிகை சுனைனா காதலிக்கும் நபரா?.. பிரபலமே ஷேர் செய்த வீடியோ
நடிகை சுனைனா
தமிழில் காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
அப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
காதலர்
கடந்த சில மாதங்களுக்கு முன் சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான கலித் அல் அமேரி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என செய்திகள் உலா வந்தது.
இந்த நிலையில் சுனைனா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கலித்தின் யூடியூப் பக்கத்தை ஷேர் செய்துள்ளார். எனவே சுனைனா காதலிக்கும் நபர் இவர்தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.