நடிகர் சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருப்பதாக தகவல் வந்ததில் இருந்து அவரது ரசிகர்கள் படத்தை அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர். அவரது ரோல் எப்படி இருக்கும் என சினிமா ரசிகர்கள் எல்லோர் மனதிலும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஆனால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை என சமீபத்தில் பரவிய தகவல் ரசிகர்களுக்கு மேலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சூர்யா41 படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் கன்னியகுமாரியில் நடந்தது, அதில் இருந்து சூர்யா பாதியிலேயே வெளியேறிவிட்டார் என தகவல் பரவியது.

ஆனால் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் தான் சூர்யா கிளம்பினார் என குழுவினர் அறிவித்தனர். இருப்பினும் இந்த படம் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை எனவும், கைவிடப்பட வாய்ப்பு அதிகம் எனவும் தகவல் பரவியது.
இந்நிலையில் சூர்யா இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஒரு ட்விட்டை போட்டிருக்கிறார். "Waiting to be back on sets" என குறிப்பிட்டு அவர் பாலா உடன் இருக்கும் போட்டோவை போட்டிருக்கிறார்.
அதனால் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா.
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022