சூர்யா சொன்னது பொய்யா? சூர்யா - பாலா படம் பற்றி பரவும் அதிர்ச்சி தகவல்!
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா படத்தில் இணைந்து இருக்கிறார்.
சூர்யா - பாலா கூட்டணி
18 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இருவரும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கியது.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஒரு ரோலில் அவர் மீனவராக நடிக்கிறாராம். ஹீரோயினாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தெரிகிறது.
#Suriya41 Theater Release pic.twitter.com/c4UEQYprEY
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 29, 2022
சூர்யா 41 ஓடிடி ரிலீஸா?
இந்நிலையில் சூர்யா - பாலா கூட்டணி சேர்ந்திருக்கும் சூர்யா 41 படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் பரிசீலனையில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சூர்யாவின் ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அடுத்த படமும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
சூர்யா இதற்கு முன் லைவ் வீடியோவில் பேசும்போது வாடிவாசல் மற்றும் பாலா படம் இரண்டும் தியேட்டரில் தான் வரும் என கூறி இருந்தார். அப்படி சூர்யா சொன்னது பொய்யா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
#Suriya41 Theater Release pic.twitter.com/c4UEQYprEY
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 29, 2022
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri