கருப்பு கிளைமேக்ஸ் மாற்றம், சக்சஸ் மீட்டில் போட்டு உடைத்த சூர்யா... என்ன விவரம்
கருப்பு படம்
நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தவர்.
கடந்த வருடம் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி இருந்தது, சாதாரண வரவேற்பை பெற்றது. இந்த வருடம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் தயாரானது.
கடந்த மே 15ம் தேதி பல போராட்டங்களுக்கு பிறகு மாஸாக வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்திருந்தார்.

கிளைமேக்ஸ்
தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை எட்டியுள்ள இப்படம் ரூ. 207 கோடி மேலான வசூல் வேட்டை செய்து வருகிறது.
விரைவில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரூ. 300 கோடியை கடந்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல் செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பு பட வெற்றி விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, குறுகிய காலத்தில் ஒப்புக்கொண்ட படம் இது. எடிட்டிங் தறுவாயில் எனது உதவியாளரின் ஆலோசனையின் பேரில் 5 மாதங்களுக்கு பிறகு கிளைமேக்ஸ் பாடலை மாற்றி மீண்டும் படம் பிடித்தோம்.
தற்போது அந்த கிளைமேக்ஸ் காட்சிக்குத்தான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri