தாமரை மற்றும் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்களா?- பிரபலமே சொன்ன வீடியோ
விஜய் டிவி பெரிதாக புரொமோஷன் செய்து தொடங்கிய ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரம்மாண்டத்தின் உச்சமாக 5வது சீசன் தொடங்கியது, இன்னும் சில தினங்களில் முடியப்போகிறது.
வீட்டில் பிரியங்கா, நிரூப், ராஜு, அமீர் மற்றும் பாவ்னி என 5 பேர் உள்ளார்கள், கடந்த வாரம் வீட்டில் இருந்து தாமரை வெளியேறி இருந்தார்.
எல்லா பிக்பாஸ் போட்டியாளர்களை போல தாமரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு லைவ் வீடியோ வந்துள்ளார்.
அப்போது ஐக்கி பெர்ரி வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரை பற்றியும் கேள்வி கேட்டு வர பிரியங்கா குறித்தும் கேட்டார். அதற்கு தாமரை, எனக்கு பிக் பாஸ் வீட்டில் முடியாமல் போனபோது அவர் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.