திருடா திருடி படத்தில் தனுஷிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா?
திருடா திருடி
கடந்த 2003ம் ஆண்டு சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருடா திருடி.
தனுஷுடன், சாயா சிங், கருணாஸ், மாணிக்க விநாயகம், இளவரசு, கிருண்ஷா என பலர் நடித்து இருந்தனர். ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
ஒரு பாடலே படத்திற்கு நல்ல வசூலை ஈட்டி உதவியாக இருந்தது என்றே கூறலாம். குடும்பம், காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக படத்தின் கதை உள்ளது.

முதல் சாய்ஸ்
ஒரு படம் உருவாகும் போது இயக்குனர் நினைக்கும் நடிகர்களே கடைசியில் நடித்து முடிப்பார்கள் என்பது இல்லை. இடையில் பல காரணங்களால் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மாற்றம் நடக்கும்.

அப்படி இந்த திருடா திருடி படத்தில் நாயகனாக நடிக்க இருந்தது வேறு நடிகராம், அவர் சில காரணங்களால் கமிட்டாகாமல் போக தனுஷிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறுயாரும் இல்லை நடிகர் ராகவா லாரன்ஸ் தானாம்.

பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu