சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக்
எதிர்நீச்சல்
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன், தர்ஷன்-அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என மும்முரமாக உள்ளார்.
இன்னொரு பக்கம் பெண்கள் ஞானம் வெளியே வர வேண்டும் என்றும் தர்ஷன்-பார்கவி திருமணம் நடக்க வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். இதற்கு இடையில் தர்ஷன்-பார்கவியை சந்தித்த விஷயம் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.
வெளியேறும் நடிகர்
இப்படி கதைக்களம் பரபரப்பின் உச்சமாக செல்ல எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஒரு நடிகர் வெளியேறுகிறார் என்ற தகவல் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் சபரி தான் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.