பிரபலங்கள் விஷால்-தன்சிகா இணைய காரணமே இந்த நடிகர் தானா?..
விஷால்
தமிழ் சினிமாவில் புரட்சி தளதியாக கலக்கும் ஒரு நடிகர். இவரைப் பற்றி பட செய்திகள் வந்ததை தாண்டி மற்ற செய்திகள் தான் அதிகம் வரும்.
ஆனால் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் நபராகவும் இவர் உள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் மயங்கி விழுந்த விஷயம் எல்லாம் அனைவருக்குமே சோகத்தை கொடுத்தது.
திருமணம்
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த யோகி பட நிகழ்ச்சியில் விஷால் தான் நடிகை தன்சிகாவை ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.
இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.
இவர்கள் காதலில் விழ காரணமே டி.ராஜேந்தர் அவர்கள் தானாம். எப்படி என்றால், கடந்த 2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த விழித்திரு பட விழாவில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.
அந்த மேடையில் டி ஆரை குறிப்பிடாமல் தன்சிகா பேசி இருக்கிறார். இதனால் டி.ராஜேந்தர் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே திட்டினார். பின் தன்ஷிகா மன்னிப்பு கேட்டு அவர் ஏற்கவில்லை, இந்த விவகாரம் பெரிதானது.
அப்போது நடிகர் சங்க தலைவராக விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டார். அன்று முதல் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அப்படியே காதலாக மாறியுள்ளது.