இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
முதலில் புதுமுகங்கள் நடிக்க ஆரம்பித்ததால் சாதாரண வரவேற்பை பெற்ற இந்த தொடர் கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல TRPயில் டாப்பில் வந்தது.
சிவ சேகர், டேவிட் இயக்க ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
பாக்கியாவாக இவரா
தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் பாக்கியாவாக நடிகை கஸ்தூரி தான் நடித்து வருகிறாராம், Intiti Ghuru Lakshmi என்ற பெயரில் தான் ஒளிபரப்பாகி வருகிறதாம்.
இந்த விஷயம் கேள்விப்படாத ரசிகர்கள் அட இவர் பாக்கியாவாக நடிக்கிறாரா என முதல் முறையாக கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா?