கமல்ஹாசனின் நாயகன் படத்தில் சிறு குழந்தையாக நடித்தது இந்த நடிகையா?- போட்டோவுடன் இதோ
கமலின் நாயகன்
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனின் எத்தனையோ படங்கள் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அப்படிபட்ட ஒரு திரைப்படம் தான் நாயகன். 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியாகி இருந்த இப்படத்தில் சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மும்பை தாதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு 3 தேசிய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது.
சிறுமி யார்
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், சரண்யாவுக்கு குழந்தையாக சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
அவர் வேறுயாரும் இல்லை மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வினோதினி தானாம்.
பிரசாந்த் நடிப்பில் வந்த வண்ண வண்ண பூக்கள் படம் மூலம் இளம் நாயகியாக வலம் வர தொடங்கிய இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
