பிக்பாஸ் 5வது சீசனில் இந்த குக் வித் கோமாளி 2 பிரபலமா?- உறுதியானதா?
பிரம்மாண்டத்தின் உச்சமாக விரைவில் பிக்பாஸ் 5வது சீசன் தொடங்க உள்ளது. நிகழ்ச்சிக்கான எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது, ஷோவை தொடங்குவது மட்டும் தான் மீதம் உள்ளது.
போட்டியாளர்கள் எப்போதோ தனிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் தான் அனைத்து போட்டியாளர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
தொகுப்பாளினி பிரியங்கா, மிலா, பவானி ரெட்டி இப்படி பல பிரபலங்கள் உறுதிசெய்யப்பட்ட போட்டியாளர்கள் என்கின்றனர். தற்போது நிகழ்ச்சி குறித்து என்ன தகவல் என்றால் குக் வித் கோமாளி 2 வெற்றியாளர் கனி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது என்கின்றனர்.
இவரது தங்கை விஜயலட்சுமி இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.