தனுஷின் புதிய படத்தில் இந்த மலையாள நடிகரா?.. இத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதா?
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்த உடனே அனைவருக்கும் வெற்றி கிடைப்பது இல்லை.
அப்படி தனது அப்பா, அண்ணா சினிமாவில் இருந்தாலும் மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டு அதையே ஒரு சவாலாக எடுத்து இப்போது சிறந்த நாயகனுக்கான தேசிய விருதுகளை அள்ளியவர் தான் தனுஷ்.

இப்போது இவர் ஹிந்தியில் Tere Ishk Mein என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார், படமும் இன்று வெளியாகிவிட்டது.
படத்திற்கான ப்ரீ புக்கிங்கும் மாஸாக நடந்துள்ள நிலையில் வசூலும் நல்ல முறையில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர்
தற்போது நடிகர் தனுஷ், அமரன் பட புகழ் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அந்த படத்தில் மலையாள சினிமாவின் டாப் நாயகன் மம்முட்டி நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இப்படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த புதிய படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.