நயன்தாரா - விக்கி திருமண தேதி இதுவா? விக்னேஷ் சிவனே போட்ட பதிவால் குழப்பம்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணம் எப்போது என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதிலும் அவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வந்தபோது அவர்கள் அனைத்து கோவில்களுக்கும் சென்று திரும்பிய பிறகு அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது.
ஆனால் அதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டுவிட்டது. தற்போது தொடங்கி இருக்கும் புது வருடத்திலாவது நயன்தாரா திருமணம் நடக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மறுபுறம் புத்தாண்டை கொண்டாட நயன் மற்றும் விக்கி இருவரும் துபாய்க்கு சென்று இருக்கும் புகைப்படனகள இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் "22.2.22 தேதியில் திருமணம் செய்துகொள்ள அனைவரும் முயற்சித்து வருகிறார்கள். அந்த தேதியை வீணாக்க விரும்பவில்லை" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதனால் அந்த தேதியில் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா என கேட்டு வருகின்றனர்.