விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இந்த அரசியல் பிரபலம் நடித்துள்ளாரா?.. கசிந்த தகவல்
ஜனநாயகன்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜனநாயகன்.
அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பிரபலம்
வரும் 2026ம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது, அதற்கு ஏற்ப விஜய்யின் ஜனநாயகன் படமும் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால், விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நபராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் ஜனநாயகன் படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.