விஜய் டிவி-யின் இந்த பிரபல சீரியலும் முடிவடைகிறதா? முக்கிய நடிகர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவால் சோகத்தில் ரசிகர்கள்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து TRP-யில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடரான காற்றின் மொழி விரைவில் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிரபல நடிகரும் காற்றின் மொழி தொடரின் கதாநாயகனுமான சஞ்சீவ் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "நான் எங்கயும் போகல, விரைவில் எனது அடுத்த சீரியல் குறித்து அறிவிப்பேன்" என கூறியுள்ளார். இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள் காற்றின் மொழி தொடரை மிஸ் செய்ய போவதாக கூறிவருகின்றனர் .