அஜித்தின் 62வது படத்தில் இந்த சீரியல் நடிகை நடிக்கிறாரா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
அஜித்
பைக் சுற்றுலா, படப்பிடிப்பு என பிஸியாகவே தன்னை வைத்துக் கொள்கிறார் அஜித். துணிவு படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தை தொடங்குவார் என பார்த்தால் அஜித் கதையை முழுவதுமாக கேட்கும் வேலையில் உள்ளார்.
அதாவது கதை மட்டுமே கேட்டு படப்பிடிப்பு சென்றுவிடாமல் படம் முழுவதும் எப்படி வரப்போகிறது என அனைத்தையும் கவனிக்கிறாராம்.
தற்போது வரை மகிழ் திருமேனி தான் அஜித்தின் 62வது படத்தை இயக்குகிறார் என உறுதியாகியுள்ளது. மற்றபடி படம் குறித்து எந்த தகவலும் உறுதியாகவில்லை.
சீரியல் நடிகை
இந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் மற்றும் சன் தொலைக்காட்சி சீரியல் நடிகை அஜித்தின் 62வது படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை வலிமை படத்தில் சிறு வேடத்தில் நடித்த சைத்ரா ரெட்டி தான் மீண்டும் அஜித்துடன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
நான் தற்கொலை செய்து இறந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம்- பரபரப்பை கிளப்பிய நடிகையின் கடிதம்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
