ஷங்கரின் அடுத்த பிரம்மாண்ட படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு தமிழ் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் எடுக்கப்படுகிறது.
ஆர்சி15 என தற்காலிகமாக இந்த படத்திற்கு ஒரு டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஷூட்டிங் புனேவில் முதலில் நடந்த நிலையில் அதன் பின் ஆந்திராவில் பல பகுதிகளில் நடைபெற்றது.

டைட்டில் என்ன?
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என படக்குழுவினர் தீவிர பரிசீலனையில் இருந்தனர்.
சர்க்கார்டு, ஆபிஸர், அதிகாரி என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு தற்பொது அதிகாரி என்ற டைட்டில் படத்திற்கு வைக்கப்பட இருப்பதாக தகவல் உறுதியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.