ஷாருக்கான்-அட்லீ படத்தின் டைட்டில் இதுவா?- புதிதாக வைரலாகும் பட பெயர்
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான அட்லீக்கு ஆரம்பத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்கிறது என்றே கூறலாம்.
தனது இரண்டாவது படத்திலேயே அவருக்கு முன்னணி நடிகரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்தும் விஜய்யை வைத்து 3 படங்கள் இயக்கிவிட்டார்.
இப்போது அட்லீக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கானையே இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க கொரோனா பிரச்சனையாக இருந்தது. தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக பூனேவில் தொடங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் பெயர் குறித்து ஒரு செய்தி. அதாவது படத்திற்கு இப்போது படக்குழு Lion என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை வேடமாம். ஒருவர் போலீஸ் மற்றொருவர் கிரிமினல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.