இந்த வைரல் பாடல் பாடகர் பிக்பாஸ் 5ல் கலந்து கொள்கிறாரா?- அட இது செம மாஸ் தகவல்
தமிழ் சினிமாவில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ் சமூகத்திற்கு ஏற்கப்படாத ஒரு விஷயமாக இந்நிகழ்ச்சி இருந்தது.
முதல் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களில் பெரிய பிரச்சனையே எழும்பியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்கள் அந்நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனாலும் நிகழ்ச்சியில் சிலரால் சர்ச்சைகள் எழும்பின. ஒரு வழியாக எல்லாவற்றையும் கடந்து ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.
பின் அடுத்தடுத்து இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன, இந்த ஜனவரி மாதம் தான் முடிந்தது. அடுத்தபடியாக இப்போது பிக்பாஸ் 5வது சீசனிற்கான வேலைகள் அதிகம் நடந்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது. அவர் யார் என்றால் Enjoy Enjaami என்ற பாடலில் ராப் போஷனை பாடிய அறிவுக்கு பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது நிஜமான தகவல் இல்லை, இவர் கலந்துகொள்கிறாரா இல்லையா என்பதை நிகழ்ச்சி தொடக்கத்தில் பார்ப்போம்.