பாரதி கண்ணம்மாவில் சீரியலில் பாரதி சொல்லப்போகும் டுவிஸ்ட் இதுதானா?
பாரதி கண்ணம்மா தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதாநாயகன்-நாயகி இருவரும் எப்போது கதையில் இணைவார்கள் என்பது தான் மக்களின் பெரிய கேள்வியாக உள்ளது.
ஆனால் அவர்களை இணைத்தால் சீரியல் முடிந்துவிடும் எனவே கதையில் அது மட்டும் சீக்கிரம் நடக்காது.
இப்போது கதையில் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொண்டதாகவும் சந்தோஷமாக வாழ்வோம் எனவும் கூறுகிறார். ஆனால் இந்த சந்தோஷம் நிலைக்கு ஒன்றே ஒன்று செய்ய வேண்டும் என பாரதி கண்ணம்மாவிடம் கேட்கிறார்.
அப்படி என்னவாக இருக்கும் என்பது மக்களின் பெரிய கேள்வி. நமக்கு கிடைத்த தகவல்படி சௌந்தர்ய லட்சுமி தனது மகள் இல்லை என்பதை மட்டும் கண்ணம்மா கூற வேண்டும் என பாரதி சொல்லப்போவதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் என்ன டுவிஸ்ட் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.