விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில்
தளபதி 67
விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் இணைந்துள்ள இப்டத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இதில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டது, படப்பிடிப்பிற்கு படக்குழு செல்லும் போது எடுத்த வீடியோ யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வெளியானது.

த்ரிஷா வெளியேறினாரா
படப்பிடிப்பிற்கு சென்ற சில தினங்களில் த்ரிஷா சென்னை திரும்பிவிட்டார்.
இதனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என நிறைய செய்திகள் பரவின. தற்போது இதுகுறித்து நடிகை த்ரிஷயாவின் தாயார் உஷா கூறுகையில், இப்போது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் பொய், உண்மையில்லை.
மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு நடக்கிறது என கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ