வலிமை கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தின் காப்பியா? வேகமாக பரவும் வீடியோ
அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படம் குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சமுதாயத்தில் இருக்கும் அழுத்தம் காரணமாக இளைஞர்கள் தவறான வழிகளில் செல்ல கூடாது, பெற்றோரை நினைத்து பாருங்கள் என ஒரு பெரிய மெசேஜ் சொல்லி இருப்பார் இயக்குனர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அஜித் குடும்பத்தை கடத்தி வந்து கட்டி தொங்கவிட்டு அதன் பின் அஜித்துடன் மோதுவார். வில்லனை பிடித்த அஜித் அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் இளைஞர்களை மன்னித்து அவர்களை குடும்பத்துடன் அனுப்பி வைப்பது போல காட்சி இருக்கும்.
இந்நிலையில் தற்போது வலிமை கிளைமாக்ஸ் ஜாக்கி சானின் நியூ போலீஸ் ஸ்டோரி என்ற படத்தின் காப்பி என தற்போது தகவல் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
அஜித்தின் குடும்பத்தினரை மேலே கட்டி தொங்கவிட்டு இருப்பது போன்ற காட்சி அப்படியே காபி என வீடியோவும் பரவி வருகிறது.
H Vinoth Enna ya ithalam ithula atlee ya copy mmbu vanga na ??#Valimai #beast @actorvijay @BoneyKapoor pic.twitter.com/z7zSVaqNAe
— ⱽʲ G O K U L (@GokulKu94690981) March 4, 2022