ராபர்ட் மாஸ்டருக்கு வனிதா தான் பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தாரா? அவரே சொன்ன பதில்
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் ஆகி இருந்தார்.
ராபர்ட்
நான் பிக் பாஸ் வீட்டுக்கு வர காரணமே வேற என முதல் நாளிலேயே சொல்லிவிட்டார் ராபர்ட். அவர் ரச்சிதா மீது ஒரு crush இருக்கிறது என வெளிப்படியகவே அறிவித்து அவர் பின்னால்சுற்றிக்கொண்டிருந்தார் . அவரை நெட்டிசன்கள் மோசமாகவும் ட்ரோல் செய்யவும் தொடங்கிவிட்டனர்.
அவரும் விடாமல் ரச்சிதாவிடம் மறைமுகமாக காதலை சொல்லி வந்தார். இதை நடிகை வனிதா விஜயகுமார் பலமுறை கண்டித்து இருக்கிறார். மேலும் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான் என கூறி இருப்பார் அவர்.

வனிதா சான்ஸ் வாங்கி கொடுத்தாரா
இந்நிலையில் இது பற்றி தற்போது எலிமினேஷனுக்கு பின் பேசி இருக்கும் ராபர்ட் தான் வனிதாவிடம் முன்பு பேசியது உண்மை தான் என கூறி இருக்கிறார்.
நான் பிக் பாஸ் செல்லும் முன்பு வணிதாவிடம் பேசி ஷோ பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். ஆனால் அவர் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்பதெல்லாம் சுத்த பொய் என கூறி இருக்கிறார்.
