படப்பிடிப்பே தொடங்காத விஜய்யின் 66வது பட தொலைக்காட்சி உரிமம் இதற்குள் விற்கப்பட்டதா?- இத்தனை கோடியா?
விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் யார் அப்டேட் தருகிறார்களோ இல்லையோ, பட நாயகி பூஜா ஹெக்டே படத்தை பற்றி ஏதாவது ஒரு விஷயம் கூறிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் அடுத்தடுத்து படப்பிடிப்பு விஷயங்கள் தெரிந்துகொள்வதால் குஷியில் உள்ளனர்.
இப்பபடத்தை தொடர்ந்து விஜய் தனது 66வது பட இயக்குனரையும் முடிவு செய்துவிட்டார். தெலுங்கு இயக்குனர் வம்சி இப்படத்தை ,இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தான் நடந்து வருகிறது, அதற்குள் படத்தின் தொலைக்காட்சி உரிமம் விலைபோனதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்கும் இப்படத்தை சன் தொலைக்காட்சி ரூ. 50 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை பெற நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.