லவ் டுடே பட புகழ் பிரதீப் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா?- தயாரிப்பது இந்த நிறுவனமா?
லவ் டுடே திரைப்படம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் செம ஹிட் படம் என்றால் அது லவ் டுடே தான். கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ராதிகாவை விட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
இப்போது பிரதீப் அடுத்த படம் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற பேச்சு தான் அதிகம்.
புதிய தகவல்
லவ் டுடே பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் பிரதீப் அடுத்து விஜய்யுடன் இணைய இருப்பதாகவும் அப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இப்படம் Sci-Fi கதைக்களம் என்றும் விஜய்யின் 68 அல்லது 69வது படமாக அமையும் என்கின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
