வாரிசு
விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆன படம் வாரிசு. அதில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி இருந்த இந்த படம் கலவையான விமர்சனம் தான் பெற்றது என்றாலும் படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் தான் என கூறப்பட்டது.

கேரள விநியோகஸ்தர் புகார்
வாரிசு படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய லாபம் என கூறப்பட்ட நிலையில் கேரளாவில் அந்த படத்தை விநியோகித்த ராய் என்பவர் தனக்கு 2 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புகார் கூறி இருக்கிறார்.
அந்த பணத்தை திரும்பி தரும்படி தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் அவர் கேட்டாராம், ஆனால் தில் ராஜு தர முடியாது என மறுத்துவிட்டதால் தற்போது அவர் விஜய்க்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தற்போது லியோ படத்தின் வியாபாரம் சூடுபிடித்து இருக்கும் நிலையில், வாரிசு பட பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் இருந்து வெளிவந்தது இதனால் தான்- முதன்முறையாக கூறிய டிடி
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri