விஜய் மற்றும் சங்கீதா 22 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறுகிறார்களா?- முற்றுப்புள்ளி வைத்த தகவல்
விஜய்-சங்கீதா
ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல ஜோடிகளில் இவர்களும் ஒருவர். சங்கீதா சினிமா துறை இல்லை என்றாலும் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களின் பேவரெட்டாக மாறிவிட்டார்.
இவர் ஏற்படுத்திய பழக்கம் கொஞ்சம் மாறியதால் பெரிய சர்ச்சை ஏற்படுத்திவிட்டது.
அதாவது பிரபலங்களின் நிகழ்ச்சி, விஜய்யின் பட நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் விஜய்யுடன் சங்கீதா வந்துவிடுவார். ஆனால் அட்லீ-ப்ரியா சீமந்தம் மற்றும் வாரிசு பட ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை.
எழுந்த சர்ச்சை
இரண்டு நிகழ்ச்சிக்கும் தொடர்ந்து சங்கீதா வராததால் இருவரும் 22 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறுகிறார்களா என சர்ச்சை கிளம்பியது. இந்த சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் இருந்தாராம். அதனால் தான் விஜய்யுடன் சில நிகழ்ச்சிகளில் வர முடியவில்லையாம்.