அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Feb 18, 2026 12:00 PM GMT
Report

அரசன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது.

அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Is Vijay Sethupathi Out Of Arasan Movie

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திலிருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்காதது, தன்னால் கொடுக்கப்பட்ட கால்ஷீட் வீணானது போன்ற காரணங்களால் இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

கணவருடன் ரொமான்ஸ்.. திருமணத்திற்கு பின் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட வீடியோ

கணவருடன் ரொமான்ஸ்.. திருமணத்திற்கு பின் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட வீடியோ

உண்மை இதுதான்

விஜய் சேதுபதி விலகியுள்ள நிலையில், அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து விலகியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அரசன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Is Vijay Sethupathi Out Of Arasan Movie

மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் விஜய் சேதுபதி அரசன் படத்திலிருந்து வெளியேறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US