அரசியல் பிரச்சாரத்தை தாண்டி சினிமாவில் விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருகிறார்.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் இருக்கும் இவர் தற்போது இத்தனை கோடி சம்பளத்தை விடுத்து மக்களுக்காக உழைக்க அரசியலில் களமிறங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அந்த வேலைகளில் பிஸியாக உள்ளார்.
குட் நியூஸ்
வரும் 2026 தேர்தலை சந்திக்கும் வேலைகளில் விஜய் களமிறங்கி இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது கடைசிப் படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் பணிபுரிந்து வருகிறார்.
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் விஜய் தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்கும் வேலையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
இந்த செய்தி வைரலாக ரசிகர்களும் இது உண்மையாக இருக்க வேண்டும் என வேண்டுதலில் இறங்கியுள்ளனர்.