இளசுகளின் மனம் கவர்ந்த மகாநதி சீரியல் முடியப்போகிறதா?.. பிரபலம் சொன்ன உண்மை தகவல்
மகாநதி சீரியல்
கடந்த 2023ம் ஆண்டு குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் மகாநதி.
4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடரில் இப்போது விஜய்-காவேரியை சுற்றியே கதை நகர்கிறது.
பசுபதி சூழ்ச்சியால் ஜெயிலில் இருக்கும் விஜய்யை வெளியே கொண்டு வந்தே ஆக வேண்டும் என காவேரி, குமரன் மற்றும் நிவின் போராடுகிறார்கள்.
குமரன், வெண்ணிலா மாமாவை தேடுகிறார், நிவின் பசுபதியை தேட அவரும் கண்டுபிடித்துவிடுகிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவிற்கு வரும் ஆபத்தை காவேரி தடுக்கிறார்.
முடிகிறதா
கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க மகாநதி சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் குமரனாக நடிக்கும் கமுருதீனிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், முன்பெல்லாம் என்னை பார்த்தால் எப்படி இருக்கிறீர்கள், படப்பிடிப்பு எப்போது என கேட்பார்கள்.
ஆனால் தற்போது மகாநதி சீரியல் எப்போது முடிகிறது என்றுதான் எல்லாரும் கேட்கிறார்கள். சீரியல் முடியாது 1000 எபிசோடுகள் வரை செல்லும் என கமுருதீன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
