அந்த படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோ..! இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி, என்ன கூறியுள்ளார் பாருங்க..
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவியை வைத்து பாவ கதைகள் என்ற Anthology படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார், இப்படத்தின் இசைப்பணிக்காக வெற்றிமாறன் இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு வந்திருந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ""இந்த படத்தின் கதை நாயகன் சூரி, கதாநாயகன் விஜய் சேதுபதி", "சூரி மூலமாகதான் படத்தின் கதை நடக்கிறது. அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது" என கூறியுள்ளார்.