ராஜமௌலி அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறாரா? மேடையில் உண்மையை போட்டுடைத்த சீயான்
நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆவதால் தற்போது படக்குழு ப்ரோமோஷனில் பிசியாக இருக்கிறது.
சமீபத்தில் ஹைதராபாத் சென்ற படக்குழு அங்கு மீடியாவை சந்தித்து பேசினார்கள். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விக்ரம் பதில் கூறினார்.
ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் நடிக்கிறேனா?
ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க இருக்கிறார். அதற்கு SSMB29 என தற்காலிகமாக டைட்டில் வைத்து இருக்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்க ராஜமௌலி உங்களிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என ஒரு செய்தி வந்தது பற்றி விக்ரமிடம் கேட்டபோது, "அவர் நல்ல நண்பர். நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நிச்சயம் ஒரு படம் ஒன்றாக பணியாற்றுவோம். ஆனால் அது இந்த படம் இல்லை" என விக்ரம் கூறி இருக்கிறார்.
இதனால் மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
Hero @Chiyaan in #SSMB29 ?#MaheshBabu #RajaMouli #SSMB #SSR #ChiyaanVikram #MalavikaMohanan #Vikram #Chiyaan #Thangalaan pic.twitter.com/psVr7LSbMm
— Sai Satish (@PROSaiSatish) August 5, 2024

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
