இந்த புதிய சீரியலில் நடிக்க விஷ்ணு சத்யா தொடரில் இருந்து வெளியேறுகிறாரா?- ஷாக்கிங் தகவல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் சத்யா, இதன் முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடர் மூலம் ஹிட் ஜோடியாக கொண்டாடப்படுபவர்கள் விஷ்ணு மற்றும் சத்யா. ரசிகர்களின் வரவேற்பால் இவர்கள் நிறைய விளம்பரங்கள் கூட ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள்.
இப்போது விஷ்ணு குறித்து ஒரு நல்ல தகவல் என்றாலும் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்படுகின்றனர். விஷ்ணு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இது சொல்ல மறந்த கதை தொடரில் நாயகனாக கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது, இதில் நடிகை ரச்சிதா நாயகியாக நடிக்கிறார்.
விஷ்ணு ரசிகர்களுக்கு இது சந்தோஷ செய்தி என்றாலும் இனி சத்யா தொடரில் வர மாட்டாரா என ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கு பதில் விஷ்ணு தான் சொல்ல வேண்டும். சத்யாவில் இருந்து வெளியேறி இந்த புதிய தொடரில் நடிக்கிறாரா அல்லது இரண்டிலும் வருவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக உள்ளது.