திடீரென தூக்கப்பட்ட நாயகி, உள்ளே வந்த மற்றொரு நடிகை, ஆனால்- கடைசியில் ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட குழப்பம்
ஜீ தமிழ்
ஜீ தமிழில் சன் மற்றும் விஜய் டிவிக்கு பிறகு நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அண்ணா, கார்த்திகை தீபம், மாரி, நள தமயந்தி என நிறைய ஹிட் சீரியல்கள் ஓடுகிறது, குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களாக உள்ளன.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஒளிபரப்பாகி வந்த சீதா ராமன் தொடர் திடீரென முடிந்துவிட்டது. இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
முடிந்த தொடர்
இந்த நிலையில் தான் ஜீயில் ஒளிபரப்பாகி வந்த நள தமயந்தி தொடர் குறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகின.
இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த பிரியங்கா நல்காரி தொடரில் இருந்து விலகிவிட்டார் என கூறப்பட்டது, ஆனால் அவரோ தவறான செய்திகளை பரப்பாதீர்கள் எதுவும் உண்மை இல்லை என கூறினார்.
பின் புதியதாக ஒரு நாயகி நடித்தார், ஆனால் அவர் சிறப்பு வேடத்தில் நடிக்க தான் கமிட்டாகி இருக்கிறார், அவர் ஒரு பேட்டியில் எனக்கே தொடரில் என்ன கதாபாத்திரம் என்று சரியாக தெரியவில்லை என்றார்.
இப்படி நாயகிகள் குழப்பம் ஒருபக்கம் இருக்க சீரியலையே தற்போது முடித்துள்ளனர். ஆமாம் சீதாராமன் தொடரை தொடர்ந்து இப்போது நள தமயந்தி தொடரும் முடிவுக்கு வந்துள்ளது.
கடைசி நாள் படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
