திருமணம் பற்றி வெளியே கூறாதது இதனால் தான்- முதன்முறையாக சர்ச்சை குறித்து பேசிய இசைவாணி
பிக்பாஸ் 5வது சீசன் விஜய்யில் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.
50 நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே போட்டியாளர்கள் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.
புரொமோக்களை பார்க்கும் போது நாளைக்குள் பெரிய சண்டை வெடிக்கும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரத்திற்கு முன் வெளியேறியவர் இசைவாணி, இவரைப் பற்றி ஒரு செய்தி உலா வந்தது. அது என்னவென்றால் இசைவாணி தனது திருமணம் குறித்து வெளியே கூறவில்லை என்பது தான்.
இதுகுறித்து இசைவாணி ஒரு பேட்டியில், 2019ம் ஆண்டு டிரம்ஸ் கலைஞர் சதீஷுடன் திருமணம் நடந்தது. ஆனால் எங்களது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை, எனவே நாங்கள் பிரிந்துவிட்டோம்.
இதனால் தான் தனது திருமணம் குறித்து வெளியே கூறவில்லை என பேசியுள்ளார்.