பிக் பாஸ் இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் முன்னாள் கணவர்! அதிர்ச்சியளிக்கும் தகவல்..
பெண் கானா பாடகராக பலரிடமும் பிரபலமானவர் தான் இசைவாணி, இவர் குரலில் சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற வானம் விடிஞ்சிடுச்சி பாடல் செம ஹிட்டானது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைவாணி, சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.
இதனிடையே தன்னுடன் சக பாடகராக இருந்த சதிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசைவாணி, சில வருடங்களுக்கு பின் அவரை பிரிந்துள்ளார். மேலும் தற்போது பெற்றோருடன் அவர் வசித்து வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது அவரின் முன்னாள் கணவரான சதிஷின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி.
அவரின் குற்றச்சாட்டில், விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்ற நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை மணந்துக் கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் இசைவாணி.
மேலும் இது குறித்து இசைவாணி அவரிடம் கேட்டபோது அவர் கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், நீ கச்சேரிக்கு செல்போது ஆசிட் வீசி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் இசைவாணி குறிப்பிட்டுள்ளார்.