பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசைவாணி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் 52 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் நடக்கின்றன.
வீட்டில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக உள்ளே நுழைந்தார். அவருக்கு பிறகு நடன இயக்குனர் அமீர் வர இன்று காலை வந்த புதிய புரொமோவில் யாரோ வீட்டிற்குள் வருகிறார்.
அனேகமாக அது சின்னத்திரை நடிகர் சஞ்சீவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து கடைசியாக வெளியேறியவர் இசைவாணி. சில இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர், இப்போது தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியுள்ளார்.
இவருக்கு 1 வாரம் ரூ. 1 லட்சம் என சம்பளம் பேசப்பட்டுள்ளதாம், 49 நாட்கள் உள்ளே இருந்துள்ளார், மொத்தம் 7 வாரங்கள் என்ற கணக்கில் அவர் ரூ. 7 லட்சம் சம்பளத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.