இதனால் தான் கணவர் வீட்டை விட்டு வந்தேன்: பிக் பாஸ் இசைவாணி
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக வந்தவர் இசைவாணி. அந்த சீனில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது அவர் தான். ஆனால் அவர் ஷோவில் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. 49ம் நாள் எலிமினேட் ஆகிவிட்டார்.
பிக் பாஸ் ஷோவில் அவர் தனது கதையை சொல்லும்போது குடும்ப கஷ்டம் மற்றும் ஏழ்மை பற்றி தான் அதிகம் பேசி இருப்பார். ஆனால் திருமணம் பற்றி பேசவே இல்லை. இது பெரிய சர்ச்சை ஆனது.
இந்நிலையில் சமீபத்தில் இசைவாணி அளித்து இருக்கும் பேட்டியில் தான் கணவர் வீட்டை விட்டு வந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
வழக்கமாக எல்லா பெற்றோரும் செய்வது போல எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் அந்த வீட்டை விட்டு வந்துவிட்டேன்.
தற்போது அவருக்கு வேறு திருமணம் கூட நடந்துவிட்டது. அந்த குடும்பத்துடன் நான் தற்போது தொடர்பில் இல்லை என இசைவாணி தெரிவித்து இருக்கிறார்.