96 படத்தின் பார்ட் 2.. கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை பரிசாக கொடுத்த தயாரிப்பாளர்
96
விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 96. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த இப்படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.
இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து 96 படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் இயக்குநர் பிரேம் குமார். ஆனால், இது காதல் கதை இல்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷிடம் கூறியுள்ளார் பிரேம் குமார்.
5 பவுன் தங்கம்
முதல் நாள் கதையை கேட்டுவிட்டு, மறுநாள் இயக்குநர் பிரேம்குமாரை அழைத்து 5 பவுன் தங்க செயின் பரிசாக கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.
இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு கதையை கேட்டதே இல்லை என்றும், கண்டிப்பாக இப்படம் மாபெரும் வெற்றியடையும் என்றும் கூறினாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.