மகள் திருமணத்திற்கு இத்தனை கோடியில் செட் போடுகிறாரா ஐசரி கணேஷ்.. மிக பிரம்மாண்ட திருமணம்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஐசரி கணேஷ். பல முக்கிய படங்களை அவர் தயாரித்து வருகிறார்.
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, VJ சித்து ஹீரோவாகும் டயங்கரம் உள்ளிட்ட பல படங்களை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்.
மகள் திருமணத்திற்கு செட்
ஐசரி கணேஷ் தனது மகள் திருமணத்திற்காக சென்னை இசிஆர் சாலையில் ஒரு பிரம்மாண்ட செட் போட்டிருக்கிறாராம். 30 கோடி ரூபாய் செலவழித்து மிக பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு அரங்கத்தை சினிமா செட் போல வடிவமைத்து இருக்கிறார்களாம்.
இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. முதலமைச்சர் தொடங்கி பல அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
