கீர்த்தி சுரேஷ் அடுத்த படம் பற்றி தீயாக பரவிய வதந்தி.. அவரே விளக்கம்
வெங்கடேஷ் மற்றும் ரந்தாமூரி கல்யாண் ராம் ஆகியோர் நடிக்கும் Venky Anil 5 புதிய தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளார். அனில் ரவிபுடி இந்தத் படத்தை இயக்குகிறார்.
இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்தப் படத்தின் பூஜை நடந்து முடிந்தது.

'குருவாயூர் அம்பலநடையில்' ரீமேக்கா?
இந்தப் படத்தின் பூஜை முடிந்த நிலையில், இது மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'குருவாயூர் அம்பலநடையில்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்தப் படத்தில், 'அழகிய லைலா' என்ற தமிழ் பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரீமேக் இல்லை..
இந்த செய்தி காட்டுத்தீயாக பரவிய நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
"No, It's not" என்று அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
